சனி, செப்டம்பர் 17

சி. சிவதாசனின் “எண்ணமும் வண்ணமும் - மௌனமொழி” ஓவியக் கண்காட்சி


   சி. சிவதாசனின் “எண்ணமும் வண்ணமும் - மௌனமொழி” ஓவியக் கண்காட்சி வடமராட்சி வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ரவீந்திரசர்மா மண்டபத்தில் இடம்பெற்றது. 17,18,19 (செப்ரெம்பர் 2016) வரை இடம்பெறும் இக்கண்காட்சியில் கடந்துபோன காலங்களும் நிகழ்கால வாழ்வும் நிரம்பிய ஓவியங்கள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் எம். நடராஜசுந்தரம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மேமன்கவி, ஹேமச்சந்திரபத்திரண, உபாலி லீலாரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். குறிப்பாக கடந்துபோன நமது பண்பாடு தொடர்பான ஓவியங்களுடன் யுத்தத்தின் கோர வடுக்கள், மனிதர்கள் எதிர்கொண்ட அக புற நெருக்கடிகள் என்பவற்றையும் பதிவுசெய்துள்ளன. 

    கரவெட்டியைச் சேர்ந்த ஓவியர் சி.சிவதாசன் நீண்டகாலமாக ஆசிரியப்பணி புரிந்தவர். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார். 1995 இல் ‘புதுயுகம்’, 2016 இல் ‘நினைவுகள்’ ஆகிய ஓவியக் கண்காட்சியையும் நிகழ்த்தியுள்ளார்.ஐந்திற்கு மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். மூத்த ஓவியர்களான ரமணி, இராசையா ஆகியோரின் தொடர்பும் அவர்களின் வழிநடத்தலும் தன்னை செம்மைப்படுத்தியதோடு வளர்ந்து வரும் இளம் ஓவியர்களின் சந்திப்புக்களும் தனது கலைப்பயணத்தில் பெரும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிடுகிறார். 

   சி.சிவதாசனின் ஓவியங்களை வடமராட்சியில் கவனப்படுத்தி காட்சிப்படுத்த ஒழுங்கமைத்த Circle of Friends அமைப்பினர் பாராட்டுக்குரியவர்கள். 
 பதிவும் படங்களும் : துவாரகன்
திங்கள், செப்டம்பர் 22

வடமராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் “கல்விக் கண்காட்சி -2014”


வடமராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் வடமராட்சிப் பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய கல்விக் கண்காட்சி  நெல்லியடி மத்திய கல்லூரியில் 22, 23 (செப்ரெம்பர் 2014) இரண்டு நாள்களும் நடைபெறுகின்றது. மாணவர்களும் ஆசிரியர்களும் அதிபர்களும் வலயக் கல்வி அலுவலக நிர்வாகத்தினரும் மிக ஆர்வமாக கலந்து கொள்ளும் இக்கண்காட்சியில் இருந்து ஒரு தொகுதி ஒளிப்படங்களைத் தருகிறேன்.

ஒளிப்படங்கள் : சு. குணேஸ்வரன் (ஆசிரியர், யா /தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயம்) 


சித்திரம் 

தமிழ்  புத்தரும் ஏழைச்சிறுவனும் 

கணிதம்/ விஞ்ஞானம்


நடனம்/சங்கீதம் /நாடகம்

முறைசாராக்கல்வி
விளையாட்டு


ICTEnglishசமயம் வரலாறு, புவியியல்

ஏனையவை